#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மனவளர்ச்சி குன்றிய மகளுக்கு தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட தாய்; நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!
உடல், மன வளர்ச்சி குன்றிய மகளை பராமரிக்க மனமின்றி தாய் இறுதியில் எடுத்த விபரீத முடிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள மாங்காடு, கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 52). இவர் தச்சுத்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். நடராஜனின் மனைவி சுலக்சனா (வயது 48). தம்பதிகளுக்கு தினேஷ் குமார் (வயது 23) என்ற மகனும், மீனாட்சி (வயது 18) என்ற மகளும் இருக்கின்றனர்.
மனவளர்ச்சி, உடல்வளர்ச்சி குன்றிய பெண்ணாக இருந்து வந்த மீனாட்சியை தாய் சுலக்சனா கவனித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கணவர் நடராஜன் மற்றும் மகன் தினேஷ் குமார் ஆகியோர் வேலைக்கு சென்றுள்ளனர்.
எப்போதும்போல வீட்டில் சுலோக்சனா, மீனாட்சி இருந்த நிலையில், இரவில் திடீரென சுலோக்சனா தனது உடல் மற்றும் மகளின் உடலில் மண்ணெணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்ற சுலோக்சனா சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். மீனாட்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் தொடர்பாக மாங்காடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.