மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்போன் உபயோகத்தால்.. தீப்பிடித்த ஸ்கூட்டி.. இளம்பெண்ணின் அலட்சியத்தால் விபரீதம்.!
சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் இளம் பெண் ரோகினி (வயது 25). இவர் மதுரவாயலில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வேலை முடிந்து தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி அதனை ஒரு பையில் போட்டு வண்டியின் முன் பகுதியில் வைத்துள்ளார். மேலும் அதே பையில் தனது செல்போனையும் வைத்திருந்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென அவரது செல்போனுக்கு அழைப்பு வந்த நிலையில் அதனை எடுப்பதற்குள் பெட்ரோல் வைத்திருந்த பையில் தீப்பற்றியது. இதனிடையே சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த பெண்ணின் மீதும் தீப்பிடித்தது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.