திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடேங்கப்பா.. சூப்பர் மார்கெட்டுக்குள் புகுந்து அசால்ட்டாக திருட்டு... பெண்மணி பகீர் செயல்.!
சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து, பொருட்களை திருடிச் சென்ற இளம்பெண்ணை கடை ஊழியர் சினிமா பாணியில் துரத்தி சென்று பிடித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகாமையில் உமையாள் தெருவில் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வரும் நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் சுடிதார் அணிந்த ஒரு இளம்பெண் பொருட்கள் வாங்குவது போல கடைக்குள் வந்துள்ளார்.
மேலும், கடையில் பொருள் வாங்குவது போல அங்கும், இங்குமாக சுற்றி விட்டு இறுதியாக துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு அந்த இளம்பெண் உணவுப் பொருட்களை திருடி வயிற்றுப்பகுதியில் மறைத்து வைத்துள்ளார்.
இதனை சிசிடிவி காட்சிகள் மூலமாக கவனித்துக்கொண்டிருந்த கடை ஊழியர் இளம்பெண்ணிடம் கேட்டபோது, அவர் ஊழியரை திசைதிருப்பி விட்டு தப்பி ஓடியுள்ளார்.
இருப்பினும், கடை ஊழியர் விடாமல் அவரை பின்னாலேயே துரத்தி சென்று பிடித்து பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டு, 'இனி இவ்வாறு செய்யாதீர்கள் என்றும், ஒருவேளை இப்படி செய்வது போல இருந்தால் எங்கள் கடைக்கு வராதீர்கள்' என்றும் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.