மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிரடியாக குறைந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை... மகிழ்ச்சியில் மக்கள்!!
இந்தியாவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மாதம் ஒருமுறை வணிக மற்றும் சமையல் எரிவாயு விலையை நிர்ணயம் செய்கிறது. அந்த வகையில் இந்த மாதம் தொடக்கத்தில் சிலிண்டர் விலை அறிவிப்பு வெளியானது.
அதன்படி தமிழ்நாட்டின் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் இந்த மாதம் தொடக்கத்தில் 1,999.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூபாய் 57 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த இரு மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று சிலிண்டருக்கு 57 ரூபாய் குறைந்து ₹1942 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பு வணிகர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.