இனி ஆன்லைனில் உங்களால இதை வாங்கவே முடியாது! அதிரடி தடை விதித்த நீதிமன்றம்!



Court says no to online medicine

உலக அளவில் ஆன்லைன் வியாபாரம் மிகவும் அதிகரித்துவிட்டது. நமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அணைத்து பொருட்களையும் வீட்டில் இருந்தவாரே ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும்.

அந்த வைகையில் ஆன்லைனில் மருந்து மாத்திரைகள் வாங்குவதற்கு ஒருசில ஆன்லைன் இணையதளங்கள் தொடங்கப்பட்டன. உங்கள் மருத்து சீட்டை அதில் பதிவேற்றம் செய்து உங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை எளிதில் பெற்றுக்கொள்ள இந்த இணையதளங்கள் உதவி செய்தன.

ஆனால் இவாறு ஆன்லைன் மூலம் மருந்து மாத்திரைகள் வாங்கினால் எங்கள் விற்பனை தடைப்படும் என்று  ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Online shopping

அவர்கள் கூறியிருந்த புகாரில் மருந்துச்சீட்டுகள் இல்லாமல் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்கப்படுவதால் பொதுமக்களுக்கு காலாவதியன மற்றும் போலி மருந்துகளே கிடைக்கும் சூழல் உருவாகிறது.இதனால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது .எனவே இந்த ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்கப்பட வேண்டும் இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி ஆன்லைனில் மருந்துகள் விற்பதற்கு இடைகால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இநத வழக்கு விவகாரம் குறித்து பதிலளிக்குமாறு மாநில சுகாதாரத்துறைக்கு நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.