#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தாய் வீட்டுக்கு வந்த கர்ப்பிணி பெண்.! குடிபோதையில் தந்தை செய்த கொடூரம்.! அதிர்ச்சி சம்பவம்.!
கிருஷ்ணகிரி மாவட்டம் மாதையன்தொட்டி கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகள் வெங்கடலட்சுமிக்கும் கர்நாடக மாநிலம் மாலூரை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் வெங்கடலட்சுமி தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் யுகாதி பண்டிகைக்காக வெங்கடலட்சுமி, தனது கணவர் சீனிவாசனுடன் நேற்று பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் சீனிவாசன் வெளியே சென்று விட்டார். அந்த நேரத்தில் மதுபோதையில் வீட்டுக்கு வந்த அருணாச்சலம், தனது மனைவி மாதேவியுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவர் மனைவியை தான் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் சுட முயன்றார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மகள் வெங்கடலட்சுமி தனது தாயை காப்பாற்றுவதற்கு குறுக்கே சென்றார். அப்போது அருணாச்சலம் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் வெங்கடலட்சுமி உடலில் குண்டுகள் பாய்ந்தன. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வெங்கடலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய அருணாசலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.