மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் வா என அழைத்த பெண்... நம்பி சென்ற விவசாயிக்கு நிகழ்ந்த சோகம்...
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு கணவரை இழந்த பவித்ரா(24) என்ற பெண்ணுடன் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளனர். இந்நிலையில் ஒரு நாள் பவித்ரா அந்த விவசாயிக்கு தொடர்பு கொண்டு நாம் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் என கூறி அழைத்துள்ளார்.
அதன்படி பவித்ரா அந்த விவசாயியை பழனியில் உள்ள தனியார் விடுதி ஒன்றுக்கு வரவழைத்துள்ளார். அங்கு பவித்ராவுடன் வேறு ஒரு பெண்ணும் இருந்துள்ளார். இருவருடனும் விவசாயி உல்லாசமாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் திடீரென அறைக்குள் நுழைந்த 3 ஆண் நபர்கள் விவசாயியை வீடியோ எடுத்துடன் அவரிடமிருந்த 10,000 ரூபாய் பணத்தை எடுத்து சென்றுள்ளனர்.
அதுமட்டுமின்றி பின் விவசாயின் செல்போனை தொடர்பு கொண்டு பண கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தராவிட்டால் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து அந்த விவசாயி இச்சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: குடும்ப சண்டையில் கொடூரம்; மாமியாரை சரமாரியாக வெட்டிக்கொன்ற மருமகன்.. மனைவியின் உயிர் ஊசல்.! திண்டுக்கல்லில் சோகம்.!
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பவித்ரா பணத்திற்காக தனது நண்பர்களுடன் சேர்ந்து விவசாயியை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. அதனையடுத்து போலீசார் பவித்ரா, காமாட்சி , பாலமுருகன் , லோகநாதன் , குணசேகரன் உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் விவகாரம்; பகிரங்க மன்னிப்பு கேட்ட ரெட்பிக்ஸ்.! விபரம் உள்ளே.!