ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
#Breaking: விரைந்து வருகிறது ஃபெங்கல் புயல்.. 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!
ஃபெங்கல் புயல் எச்சரிக்கை காரணமாக புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
வங்கக்கடல் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று, இந்த ஃபெங்கல் புயல் நாளை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: #Breking: உருவானது ஃபெங்கல் புயல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் வடகடலோர, அதன் உள் மாவட்டங்களில் காற்று, கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்
இந்நிலையில், சென்னையில் உள்ள எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6ம் எண் எச்சரிக்கை கூண்டும், கடலூரில் 7ம் எண் எச்சரிக்கை கூண்டும், நாகையில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், புதுச்சேரியில் 7 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், காரைக்கால் துறைமுகத்தில் 5 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. மேலும், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, புயல் துறைமுகத்திற்கு அருகில், துறைமுகம் வழியாக புயல் கரையை கடக்கும் சூழலில் ஏற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #Breaking: மக்களே ரெடியா? வங்கக்கடலில் உருவாகிறது ஃபெங்கல் புயல் - வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!