மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனது உயிரை கொடுத்து மூன்று பேரின் உயிரை காப்பாற்றிய கட்டிட தொழிலாளி.! இறந்தபின்பும் உயிர் வாழும் சம்பவம்.!
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் மூளை சாவு அடைந்ததை அடுத்து அவரது உடல் உறுப்புக்கள் தானமாக வழங்கப்பட்டு அந்த உறுப்புகள் மூலம் மூன்று பேருக்கு மறுவாழ்வு வழங்கப்பட உள்ளது.
நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு என்னும் பகுதியை சேர்ந்த சிவ பெருமாள் (35) என்ற கட்டிட தொழிலாளியான இவருக்கு காமாட்சி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் சிவ பெருமாள் தனது வீட்டின் அருகில் உள்ள சமுதாய கூட்டத்தின் மேற்கூரையில் நின்றபடி கட்டுமானப்பணிகளை மேற்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சிவ பெருமாள் கால் தவறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு அவர் மூளை சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து சிவ பெருமாள் உடல் உறுப்புக்களை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். இந்நிலையில் சிவ பெருமாளின் உடல் உறுப்புகள் தனமாக பெறப்பட்டு மூன்று பேருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் நடந்த முதல் உடல் உறுப்பு தானம் இதுவே என கூறப்படுகிறது.