மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இடையே சிக்கி மரணிக்கும் தருவாயில், பெண் காவல் தெய்வங்களால் உயிர்பிழைத்த நபர்..!
ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிய ஒரு நபரை, பெண் காவலர் துணிச்சலுடன் செயல்பட்டு மீட்டதால் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து, திருச்சி செல்லக்கூடிய ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் நேற்று இரவு 11:30 மணியளவில் புறப்பட்டது. அப்போது ரயில் நகர தொடங்கிய நிலையில், ஒரு பயணி ரயிலில் ஏற முயற்சி செய்ததில், கால் தவறி கீழே விழுந்துள்ளார்.
இதில் அவர் ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிய நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் அவர் விழுவதைக் கண்டு உடனடியாக அங்கு சென்று, தனது கையால் பிடித்து இழுத்து மீட்டுள்ளார்.
தொடர்ந்து மற்றொரு நபரின் உதவியோடு இருவரும் சேர்ந்து அவரை இழுத்து காப்பாற்றிய நிலையில், அவர் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தார். இதனையடுத்து ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே ஒரு பயணி சிக்கிக் கொண்ட சம்பவம் ரயில்நிலையத்தில் சலசலப்பை உண்டாக்கியது.
மேலும்,பெண் காவலர் துணிச்சலுடன் செயல்பட்டு தக்க சமயத்தில், அந்த நபரின் உயிரை காப்பாற்றியதால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். தற்போது பெண் காவலர் பயணியை காப்பாற்றும் வீடியோ இணையதள பக்கத்தில் தீயாக பரவி வருகிறது.