ஜல்லிக்கட்டுல மாடு முட்டிட்டா காசு! அதிரடி அறிவிப்பு வெளியிட்ட மோடி! குஷியில் வீரர்கள்!



government-announced-insurance-for-one-rupee

பொங்கல் வருவதை ஒட்டி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டிற்கு புகழ்போன அவனியாபுரத்தில் விரைவில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. மாடுபுடி வீரர்களை குஷி படுத்தும் வகையில் இந்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபுடி வீரர்களுக்கு காப்பீடு வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இந்த காப்பீடு திட்டமானது பிரதம மந்திரி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ரூ. 12 க்கு ஒரு லட்சத்திற்கான காப்பீடும், மாதம் ரூ. 300 க்கு இரண்டு லட்சத்திற்கான காப்பீடும் ஆண்டிற்கு ஒருமுறை கட்டும் வசதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Jallikatu

மாடுபிடி வீரர்கள் தங்களது ஆதார் என்னுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி மூலம் நேரடியாக பணம் செலுத்தும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான பதிவுமுறை குறித்து சரியான வழிகாட்டுதல் இல்லாததால் மாடுபிடி வீரர்கள் தவித்து வருகின்றனர்.