அரசனை நம்பி புருஷனை கைவிட்ட பெண்.. கள்ளகாதலனால் ஏற்பட்ட விபரீதம்.!



gujarat women killed by illegal lover

குஜராத் மாநிலத்தில் இருக்கும் ஜுனாகட் மாவட்டத்தில் ரூபாவதி எனும் கிராமத்தில் வசித்து வந்த 35 வயது பெண்மணி கடந்த ஆண்டு காணாமல் போயுள்ளார். அவருடைய கணவர் வல்லப் போலீசில் சென்று தனது மனைவி வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் 9 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார் என்று புகார் கொடுத்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓடிப்போன பெண்மணியை தேடி வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு 11 வயதில் ஒரு மகன் இருக்கின்றார். அந்த பெண் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண்ணுக்கு ஹார்டிக் என்ற வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. 

gujarat

இவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடிச் செல்ல முடிவெடுத்து இருக்கின்றனர். அந்தப் பெண்ணும் ஹார்திகை நம்பி ஓடி வந்த நிலையில் ஆளில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அவரை ஹார்டிக் கொலை செய்துள்ளார். பின்னர், அங்கிருந்த கிணற்றில் வீசிவிட்டு தப்பியோடி இருக்கிறார். 

இதையும் படிங்க: மணமான 4 மாதத்தில்.. கணவன் எடுத்த முடிவு.. மனைவிக்கு எமனான சோகம்.!

அந்த பெண் ஓடிச்சென்று விட்டதாக அவரது கணவரையும் நம்ப வைத்துள்ளார். இது பற்றி போலீசார் விசாரணையில் தெரியவந்ததும் பெண்ணின் உடல் தூக்கி எறியப்பட்ட கிணற்றுக்கு சென்று எலும்புக்கூடுகளை பறிமுதல் செய்தனர். மேலும், கள்ளக்காதலன் ஹார்டிக் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: தாலிக்கயிறு ஏறிய சற்று நேரத்தில், தூக்கு கயிறு.. இளம்பெண்ணின் விபரீத முடிவு.!