மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லாரி - இருசக்கர வாகனம் மோதி விபத்து.. இளைஞர் பரிதாப மரணம்.! நெல்லை அருகே சோகம்.!
இருசக்கர வாகனத்தில் வந்தபோது, லாரி மோதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் வசித்து வந்தவர் சோனு (வயது 26). இவர் நெல்லை அருகாமையில் உள்ள கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருடைய தம்பி புல்சனும் அதே நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த நிலையில், நேற்று அதிகாலை இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தை புல்சர் ஓட்டிய நிலையில், அதே பகுதியில் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அவரது இரு சக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த புல்சன், சோனு இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், சோனு சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பின் இது குறித்து தகவலறிந்த கங்கைகொண்டான் காவல்துறையினர் மற்றும் இன்ஸ்பெக்டர் பெருமாள் சம்பவ இடத்திற்கு சென்று, புல்சனை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அத்துடன் சோனாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.