ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
#Breaking: சிஎஸ்கே தோல்வியை கிண்டல் செய்த இளைஞர் கொலை விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்.. பகீர் தகவல் அம்பலம்.!

:
சென்னையில் உள்ள துரைப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஜீவரத்தினம் (வயது 26). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஐந்து பேர் கும்பலால் தாக்கப்பட்டார். படுகாயமடைந்த ஜீவரத்தினம், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
இளைஞர் மீது தாக்குதல்
தொடர்ந்து ஜீவரத்தினத்தின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், அப்பு, கோகுல், ரமேஷ், அஜய், ஜெகதீஷ் ஆகியோர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், சென்னை - பெங்களூர் அணிகள் இடையேயான போட்டியில், சென்னை அணி தோற்றது.
இதையும் படிங்க: திமுக - தவெக இடையே போட்டி.. விஜய் பேச்சுக்கு இபிஎஸ் பதில் என்ன? பேட்டி உள்ளே.!
மருத்துவமனையில் அனுமதி
இந்த விசயத்துக்கு ஜீவரத்தினம் கிண்டல் செய்ததாகவும், இதனால் கொலை நடந்தது எனவும் சொல்லப்பட்டது. இந்த விஷயம் குறித்து துரைப்பாக்கம் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து, மேற்கூறிய ஐவர் கும்பலை கைது செய்தனர். தொடர்ந்து ஜீவரத்தினம் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
இளைஞர் உயிரிழப்பு
அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த ஜீவரத்தினம், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. கைதானவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெண் விவகாரத்தில் கொலை
முன்னதாக சென்னை அணி தோல்வி குறித்து கிண்டல் செய்ததால் கொலை என கூறப்பட்ட நிலையில், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதவாது, ஜீவரத்தினம் நண்பர் ஒருவரின் மனைவியுடன் பழகி வந்துள்ளார். இதுகுறித்து எழுந்த வாக்குவாதத்தில் ஜீவரத்தினம் திமிராக பேச, ஆத்திரமடைந்த கும்பல் அவரை அடித்துக்கொன்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: நடத்தை சந்தேகத்தால் விபரீதம்; 3 வயது சிறுமியை கழுத்து நெரித்துக்கொன்ற தந்தை.!