மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பகீர்... வாசலில் செருப்பு விடுவதில் தகராறு... பெண் மாடியில் இருந்து தள்ளி படுகொலை.. ஒருவர் கைது.!
செருப்பு விடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது காவல்துறை.
சென்னை திருவொற்றியூரில் உள்ள குடியிருப்பில் இரண்டாவது மாடியில் வசித்து வந்தவர் வசந்தி(40). இவருக்கு எதிர் வீட்டில் குமார் என்பவர் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் இவர்களுக்கிடையே வீட்டு வாசலில் செருப்பு விடுவது தொடர்பாக தகராறு அடிக்கடி ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று இதே பிரச்சினை ஏற்பட இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த குமார் வசந்தியை இரண்டாவது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த வசந்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வசந்தியின் எதிர் வீட்டுக்காரரான குமார் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.