பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அம்மா, அப்பா, அண்ணன்.. 15 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை.. சென்னையில் பேரதிர்ச்சி.!
வளர்ப்புத்தந்தை, அவரின் மகன் என சிறுமியை சீரழிக்க முயன்ற கேடுகெட்ட நபர்களுக்கு, பெண்ணும் துணைபோன கொடுமை சென்னையில் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள மாதவரம், பாரதியார் மூன்றாவது குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் சுரேசந்தர் (வயது 53). இவரின் இரண்டாவது மனைவி மல்லி (வயது 35). சுரேசந்தரின் முதல் தாரத்திற்கு பிறந்த மகன் சிவா (24).
வீட்டில் இருக்கும் சிறுமி
இவர்கள் மூவரும், மல்லியுடைய முதல் கணவரின் வாயிலாக பிறந்த 15 வயது பெண் குழந்தையுடன் கடந்த 7 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருகின்றனர். சிறுமி அங்குள்ள அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை பயின்றுவிட்டு, பின் மேற்படி படிக்கச் செல்லவில்லை.
இதையும் படிங்க: 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொலை மிரட்டல்.!! 55 வயது கூலி தொழிலாளி தப்பியோட்டம்.!!
இதனிடையே, சிறுமியின் வளர்ப்புத்தந்தையான சுரேசந்தர், அவரின் மகன் சிவா ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்கள். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மூவர் போக்ஸோவில் கைது
இதன்பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலத்துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தந்தையும், மகனுமான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இந்த விஷயத்திற்கு சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் சிறுமி காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசியதும் அம்பலமானது. இதனையடுத்து, தாய், வளர்ப்புத் தந்தை, அவரின் மகனை கைது செய்த காவல் துறையினர், அனைவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
சிறுமி தற்போது காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். கைதானவர்கள் மீது போக்ஸோ சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் பெயரும் இங்கு மாற்றி கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காஞ்சிபுரம்: அக்கா-தம்பி பாலியல் பலாத்காரம்.., 5 வயது சிறுவனை கொன்ற காம சர்வேயர்.. தமிழகமே பேரதிர்ச்சி.!