ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
சென்னை: 60 வயது மூதாட்டி பலாத்கார முயற்சி; 22 வயது ரௌடி கைது.!

சென்னையில் உள்ள புளியந்தோப்பு, சுந்தரபுரம் பகுதியில் வசித்து வருபவர் விமலா (வயது 60, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). விமலா மாதவரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
தனியே உறங்கினார்
இவருக்கு மகன், மகள் இருக்கும் நிலையில், இருவருக்கும் திருமணம் முடிந்து தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில், 12 மணியளவில் விமலா வீட்டில் தனியே உறங்கியுள்ளார்.
இதையும் படிங்க: சென்னை மக்களே ரெடியா? நாளை இந்த பகுதிகளில் மின்தடை..!
பலாத்கார முயற்சி
அப்போது, வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், விமலாவை பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார். இதனால் அவர் அலறவே, மர்ம நபர் தப்பிச் சென்று இருக்கிறார்.
ரௌடி கைது
இதனையடுத்து, மூதாட்டி புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் புளியந்தோப்பு, சுந்தரபுரம் நான்காவது தெருவில் வசித்து வரும் சூர்யா என்ற துண்டு பீடி சூர்யாவை (வயது 22) கைது செய்தனர்.
விசாரணையில், சூர்யாவின் மீது ஏற்கனவே 7 குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், ரௌடியாக வலம்வந்தவர் தற்போது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்னை: விஜிபி தீம் பார்க்கில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; பணியாளருக்கு அதிகாரிகள் வலைவீச்சு.!