மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மின்கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளான கார்; 2 பெண்கள் பரிதாப பலி.!
ஈரோடு மாவட்டத்தில் வசித்து வருபவர் கலைச்செல்வன் (வயது 26). இவர் கடந்த அக்.07 அன்று கோயம்புத்தூருக்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.
அச்சமயம், கலைச்செல்வனின் நண்பர் ஒருவர், தனக்கு தெரிந்த சௌந்தர்யா (வயது 26), ரிஸ்வானா (வயது 20) ஆகியோரை கோவையில் இறக்கி விடுமாறு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வேகத்தடையால் நிகழ்ந்த சோகம்; லாரி சக்கரத்தில் சிக்கி மகன், பேரன் கண்முன் தலை நசுங்கி பெண் பலி.!
இவர்கள் காரில் கோவை நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தபோது, கார் வில்லரசம்பட்டி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியது.
பரிதாபமாக உயிரிழப்பு
இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த ரிஸ்வானா, சௌந்தர்யா ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், படுகாயத்துடன் உயிருக்கு போராடிய கலைச்செல்வன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: மருமகளை மனைவியாக்க Ex. ஆர்மி ஸ்கெட்ச்; கணவனுக்கு நேர்ந்த படுபயங்கரம்.. நடுநடுங்க வைக்கும் கொலை.!