#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இட்லி சாப்பிட்டதால் விபரீதம்; மூச்சுத்திணறி 15 வயது சிறுவன் பலி.!
இரவு உணவாக சாப்பிட இட்லி எடுத்துக்கொண்ட சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், மங்களபுரம் பகுதியில் வசித்து வருபவர் தேவி. இவரின் மகன் வெங்கடேஷ் (வயது 15). இவர் மனநலம் பாதித்தவர் என கூறப்படுகிறது.
இதனால் மகனை கோரிமேடு பகுதியில் இருக்கும் காப்பகத்தில் தேவி சேர்த்துள்ளார். அங்கு காப்பக பணியாளர்கள் உதவியுடன் சிறுவன் பராமரிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: நாமக்கல்லில் பரபரப்பு... சக தொழிலாளியை போட்டு தள்ளிய இளைஞர்.!! கொலையில் முடிந்த முன் விரோதம்.!!
இந்நிலையில், நேற்று சாப்பிட காப்பகத்தில் சிறுவனுக்கு உணவாக இட்லி வழங்கப்பட்டுள்ளது. இதனை சாப்பிட்ட சிறுவன் மூச்சுத்திணறலை எதிர்கொண்டதாக தெரியவருகிறது.
சிறுவன் பலி
இதனையடுத்து, உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து 10 பேரை துரத்திக்கடித்த தெருநாய்; நாமக்கல்லில் பகீர் சம்பவம்.!