#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிவகங்கை: கை-கால் கட்டிப்போட்டு சிறுமியின் சடலம் மீட்பு.. பலாத்காரம் & கொலை.. 13 வயதில் துயரம்.! தமிழகமே அதிர்ச்சி.!
சிவகங்கை மாவட்டம், கல்குளம் கிராமத்தை சேர்ந்த பாலுச்சாமியின் கிணற்றில், 13 வயதாகும் சிறுமியின் சடலம் அக்.24 அன்று மீட்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலையான பின்னர் கை-கால் உடைக்கப்பட்டு, கயிற்றால் கட்டப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது அம்பலமானது.
கர்ப்பிணி மனைவி
விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சதிஷ் குமார் கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே போக்ஸோ வழக்கில் கைதாகி, 10 ஆண்டுகள் சிறைக்கு சென்றவர் ஆவார். தற்போது விடுதலையாகி திருமணம் முடிந்துள்ளது. இவரின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். பிரசவத்திற்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதியானார்.
இதையும் படிங்க: கொல்லிமலைக்கு சுற்றுலா அழைத்துச்சென்று, 16 வயது சிறுமி பலாத்காரம்; காதலனுக்கு ஜிங்., சக் போட்ட நட்புகள்.!
சிறுமி பலாத்காரம் கொலை
அங்கு 13 வயது சிறுமியின் தாயாரும் இரண்டாவது பிரசவத்திற்கு அனுமதி செய்யப்பட்டார். சிறுமியுடன் பழக்கத்தை ஏற்படுத்திய சதிஷ், அவரை தன்னுடன் கல்குளம் வீட்டிற்கு அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார். பலாத்காரத்திற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை கொலை செய்ததும் அம்பலமானது.
இதையும் படிங்க: அம்மா, அப்பா, அண்ணன்.. 15 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை.. சென்னையில் பேரதிர்ச்சி.!