ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
காவலருக்கே இந்த நிலைமையா? பெண் காவலரின் 11 சவரன் தாலி சங்கிலி பறிப்பு; வாகனத்தில் செல்லும்போதே பகீர்..!

தாம்பரம் சேலையூர் போல் பெண் காவலரிடம் நகைகள் பறித்துச்செல்லப்பட்ட சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், குற்றப்பிரிவு காவல்துறையில், காவலராக வேலை பார்த்து வருபவர் லட்சுமி. சம்பவத்தன்று இவர் தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்க்கு சென்று கொண்டு இருந்தார்.
11 சவரன் நகை கொள்ளை
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 வழிப்பறி கொள்ளையர்கள், லட்சுமியின் 11 சவரன் அளவிலான தங்க நகைகளை பறித்துச் சென்றனர். இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி விழுந்த லட்சுமி காயமடைந்தார். அங்கிருந்த நபர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்ப்பட்டார்.
இதையும் படிங்க: 24 வயது இளைஞரின் உயிர் நொடியில் பறிபோன சோகம்.. ஆம்பூரில் துயரம்.. கலங்கவைக்கும் வீடியோ.!
காவல்துறையினர் விசாரணை
பின் இதுதொடர்பாக திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வழிப்பறி கொள்ளையர்களுக்கு வலைவீசி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக தாம்பரம் சேலையூர் பகுதியை சேர்ந்த பெண் காவலர், பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் வழியில், வீட்டு வாசலில் மர்ம நபர்களால் செயின் பறிப்பு சம்பவத்தை எதிர்கொண்டார். இதனிடையே, அதேபோல சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.
இதையும் படிங்க: சிவகங்கை: ஓடஓட விரட்டி பயங்கரம்.. அரசு மருத்துவமனை வளாகம் அருகே இளைஞர் படுகொலை.!