தமிழகமே அதிர்ச்சி.. இன்ஸ்டா காதலனை நம்பிச்சென்ற பெண், சுடுகாட்டில் கூட்டுப்பாலியல் வன்கொடுமை.!



in Tiruvannamalai Girl Raped by 2 persons 

 

2 மாதத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி, காதலனாக மாறிய நபரை நம்பி நேரில் சென்ற இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ள்ளாக்கப்பட்டுள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாவக்கரை பகுதியில் வசித்து வருபவர் ரூபன் (வயது 26). இவர் வேன் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். தண்டராம்பட்டு பகுதியில் உள்ள கிராமத்தில் 20 வயதுடைய பெண் வசித்து வருகிறார். வேன் ஓட்டுநர் ரூபனுக்கும்-பெண்ணுக்கும் இடையே இன்ஸ்டாகிராமில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ஆரணி: பள்ளிப்பேருந்தின் தறிகெட்ட வேகம்.. நொடியில் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.. பதறவைக்கும் காட்சிகள்.! 

காதல் வலை

இதன்பேரில் ரூபன் பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறார். பின் பெண்ணும் காதலில் விழுந்து, இருவரும் பேசி வந்துள்ளனர். இதனிடையே, பெண்ணை நேரில் சந்திக்க வேண்டும் என்று ரூபன் கூறியதால், இளம்பெண் கடந்த ஜன.07 அன்று நாவக்கரை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, தனியே சென்று பேசிக்கொண்டு இருக்கலாம் என கூறிய ரூபன், சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். 

Tiruvannamalai

கூட்டுப்பாலியல் பலாத்காரம்

அங்கு முன்னதாகவே ரூபனின் நண்பர் தனுஷ் (20) என்பவரும் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து பெண்ணை கட்டாயப்படுத்தி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இத விஷயம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் இருவரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.

இதையும் படிங்க: SC வரக்கூடாது.. தவெக நிர்வாகிகள் நியமனத்தில் புகுந்த சாதி.. உழைத்தவர்கள் குமுறல்.!