மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வங்கி பெண் அதிகாரியை காதலில் வீழ்த்தி, உல்லாசமாக இருந்து கைவிட்ட கார் ஓட்டுநர்.. தர்ணா, தற்கொலை முயற்சி..!
வங்கியில் பணம் செலுத்த வந்த ஓட்டுனரிடம் மனதை பறிகொடுத்து, தனிமையில் தன்னையும் பறிகொடுத்த வங்கி பெண் ஊழியர், காதலனின் வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்தி தற்கொலைக்கு முயற்சித்த சோகம் நடந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, அச்சமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் கோசலராமன் (வயது 23). இவர் சென்னையில் கால் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். சென்னை அசோக் நகரில் வசித்து வரும் 26 வயது இளம்பெண், தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார்.
கோசலராமனுக்கும் - இளம்பெண்ணுக்கும் வங்கியில் பணம் செலுத்தும் போது பழக்கம் ஏற்பட்டு, பின்னாளில் இது காதலாக மாறியுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், கோசலராமன் திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை பல இடங்களுக்கு தனிமையில் அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
கடந்த மாதம் இளம்பெண் திருமணம் குறித்து கோசலராமனிடம் வலியுறுத்த, காதலியிடம் எதுவும் சொல்லாமல் அவர் ஜோலார்பேட்டைக்கு திரும்பி சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், கடந்த ஜன. 27 ஆம் தேதி ஜோலார்பேட்டைக்கே சென்று காதலனிடம் திருமணம் செய்ய கூறியுள்ளார்.
அதற்கு கோசலராமனின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, அதிர்ச்சியடைந்த இளம்பெண் காதலனின் வீட்டுக்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த 9 நாட்களாக தர்ணா போராட்டம் நடந்த நிலையில், கோசலராமனின் குடும்பத்தினர் பெண்மணியை திட்டி இருக்கின்றனர்.
இதனால் மனமுடைந்துபோன இளம்பெண் கிருமி நாசினி குடித்து தற்கொலைக்கு முயற்சிக்கவே, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக இளம்பெண் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.