96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்ம மரணம் விவகாரம்.. 10 வருடமாக தொடரும் மர்மம்... நடப்பது என்ன?.. உள்ளூர் மக்கள் பகீர்.!
சின்னசேலம் கனியாமூர் சக்தி பள்ளியில் மாணவி மர்ம மரணமடைந்த விவகாரத்தில் பல பகீர் தகவல் வெளியாகி வருகின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம், கனியாமூரில் சக்தி இன்டெர்னஷ்னல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் விடுதியில் தங்கியிருந்தவாறு கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியநெசலூர் கிராமத்தை சார்ந்த ஸ்ரீமதி என்ற 17 வயது சிறுமி 12-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
இந்த மாணவி கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டதாக சிறுமியின் வீட்டாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி உயிரிழந்த விவகாரத்தை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்ற நிலையில், அவர்களை அலைக்கழித்து உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதை போல பள்ளி நிர்வாகம் பதில் அளித்த நிலையில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட யாரும் மாணவியின் குடும்பத்தாரிடம் பேசவில்லை. நியாயம் கேட்டு போராட சென்ற மக்களின் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். இந்த தகவல் பெண்ணின் தாய் கொடுத்த வீடியோவில் உள்ளது.
இந்த விஷயத்தில், உள்ளூர் மக்களின் கூற்றுப்படி கடந்த 10 வருடங்களில் ஸ்ரீமதியை போல 7-க்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவை அனைத்தையும் பள்ளி நிர்வாகம் மூடி மறைத்துள்ள நிலையில், ஸ்ரீமதியின் தற்கொலை சற்று வெளியே வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சமுத்திரக்கனியின் அப்பா திரைப்படத்தில் மாணவன் அடித்து கொலை செய்யப்பட்டு, அவனின் உடலை பெற பெற்றோரை அலைக்கழிக்கும் சம்பவம் காட்சிப்படுத்தப்பட்ட இருக்கும். அதனைப்போன்றதொரு துயரம் இங்கு நடந்துள்ளது. உயிரிழந்த மாணவிக்கு என்ன நடந்தது? அவர் எப்படி உயிரிழந்தார்? என்பது குறித்த விசாரணை நடத்தவும், முன்னதாக நடைபெற்ற மரணம் தொடர்பான விசாரணை நடத்தவும் தனி ஆணையம் அமைக்க வேண்டும் என பலரின் தரப்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.