திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தம்பியால் அண்ணனுக்கு நேர்ந்த படுபாதகம்.. ஒரே அடியில் துடிதுடித்து பறிபோன உயிர்.!
அண்ணன் - தம்பி இடையே ஏற்பட்ட விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சும் தகராறில் அண்ணன் தம்பியால் கொலை செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், வயலூர் பகுதியை சார்ந்தவர் விவசாயி மருதுபாண்டி (வயது 55). இவரது தம்பி சுரேஷ். இவர்கள் இருவருக்கும் சொந்தமான வயல் அடுத்தடுத்த நிலங்களில் உள்ளது. வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் விவகாரம் தொடர்பாக சகோதரர்கள் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், மருதுபாண்டி தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முயற்சித்த நேரத்தில், இருவருக்கும் இடையே வாக்குவாதமானது ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுரேஷ் தனது அண்ணன் மருதுபாண்டியை உருட்டுக்கட்டையால் தாக்கி, அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பலத்த காயமடைந்து இருந்த மருதுபாண்டி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார்.
சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட மருதுபாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் காவல் துறையினர், சுரேஷின் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.