திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிற மதம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த வாலிபர் கைது.!
சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு ஒரு புகார் வந்துள்ளது. அந்த புகாரில் முகமது சுஹைல் என்பவர் கடந்த 29ஆம் தேதி தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பெண்ணின் மாண்பை குரைக்கும் விதமாகவும், மாற்று மதங்களை சேர்ந்த மக்களிடையே வெறுப்பை தூண்டும் வகையிலும் வீடியோ வெளியிட்டார்.
எனவே, சம்பந்தப்பட்ட இளைஞர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுருந்தது. இந்த புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல்லாவரம் மீனாட்சி நகர் கலாதரன் தெருவை சேர்ந்த முகமது சுகையில் மீது வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சைபர் கிரைம் புகார்கள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் https://www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.