மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பழசை விடுங்க... நீங்களா? நாங்களா? என பேசிக் கொண்டுபோனால் பிரச்சினை சரி ஆகாது.! சிறப்பாக பேசிய துரைமுருகன்.! ஓகே சொன்ன எடப்பாடியார்.!
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. தமிழக சட்டசபையில் இன்று கொண்டு வரப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதாவை ஆதரித்து பா.ஜனதாவை தவிர அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது என பேசினார். அப்போது பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் விலக்கு மசோதா ஏற்கனவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது. மீண்டும் நிறைவேற்றதான் பேரவை கூடியுள்ளது. இதற்கிடையே வேறு பிரச்சினைகளை பேசி திசைத்திருப்ப வேண்டாம் என தெரிவித்தார்.
அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஆட்சியில்தான் நீட் வந்தது என்ற தவறான கருத்து உள்ளது. தமிழகத்திற்குள் நீட் எப்போது வந்தது என்பதைதான் விஜயபாஸ்கர் பேசுகிறார் என குறிப்பிட்டார். அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன் இப்போது நீங்களா? நாங்களா? என பேசிக் கொண்டுபோனால் பிரச்சினை நீண்டு கொண்டே போகும். பேசியதை விடுங்கள் தீர்மானத்திற்கு ஆதரவளியுங்கள் என கூறினார். நீட் தேர்வை ரத்து செய்ய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அ.தி.மு.க. முழு ஆதரவு அளிக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.