மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரூ.50 ஆயிரம் கடன் தர மறுத்த பெண் கழுத்து நெரித்து கொலை.. மாமனார், மருமகள் வெறிச்செயல்.!
கடன் தர மறுப்பு தெரிவித்த பெண்ணை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், ஆலோர் கக்கன் நகரில் வசித்து வருபவர் ஜோதிமணி. இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் எஸ்தர். அவரின் மாமனார் மணி.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக எஸ்தர் மற்றும் மணி ஆகியோர் சேர்ந்து ஜோதிமணியிடம் ரூ.50 ஆயிரம் கடன் கேட்டுள்ளனர். அதற்கு ஜோதிமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் எஸ்தர் மற்றும் மணி சேர்ந்து ஜோதிமணியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் எதுவும் தெரியாதது போல இருந்த நிலையில், காவல் துறையினரின் விசாரணையில் உண்மை அம்பலமாகியுள்ளது.