#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒரு தலை காதல் விவகாரம்..மாணவியை கடத்திய லோடு ஆட்டோ டிரைவர்.. போலீஸ் வலைவீச்சு.!
செய்யாறு அருகே கொடையம்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தவர் பொன்னம்பலம். இவர் லோடு ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பொன்னம்பலம் கடந்த ஓராண்டாக அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
இதனையடுத்து அந்த மாணவியை தினமும் பொன்னம்பலம் பின் தொடர்ந்து சென்றுள்ளார். மேலும் மாணவியிடம் பல முறை பொன்னம்பலம் காதலிப்பதாக சொல்லி தொந்தரவு செய்துள்ளார். அந்த மாணவி விருப்பமில்லை என்று தெரிவித்தும் விடாமல் தொல்லை கொடுத்துள்ளார்.இந்நிலையில் மாணவி தனது பெற்றோரிடம் பொன்னம்பலம் காதலிப்பதாக சொல்லி பின் தொடர்ந்து வந்து தரும் தொந்தரவுகளை பற்றி கூறியுள்ளார்.
இதனைதொடர்ந்து மாணவியின் பெற்றோர் பொன்னம்பலத்தை கூப்பிட்டு கண்டித்துள்ளனர். ஆனால் இதனை சற்றும் பொருட்படுத்தாமல் பொன்னம்பலம் மீண்டும் மாணவிக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் பொன்னம்பலத்தை காவல் துறையினர் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் மாணவியை பொன்னம்பலம் தனது நண்பர்களுடன் சேர்ந்து பைக்கில் கடத்தி சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து மோரணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், பொன்னம்பலத்தையும் தீவிரமாக தேடி வருகிறார்.