மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஷம் அருந்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர் தற்கொலை; வங்கிக்குள் பிணமாக மீட்கப்பட்ட சோகம்.!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, தொண்டைமாந்துறை கிராமத்தில் வசித்து வருபவர் கணபதி (வயது 54). இவரின் மனைவி சரஸ்வதி (வயது 45). தம்பதிகளுக்கு அருண் குமார் என்ற 17 வயதுடைய மகனும், ராஜவிக்னேஷ் என்ற 8 வயதுடைய மகனும் இருக்கின்றனர்.
கடந்த அக்.01, 1991 அன்று கூற்றுறவுத்துறையில் விற்பனையாளராக கணபதி வேலைக்கு சேர்ந்து, தற்போது கூடுதல் செயலராக தொண்டமாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வேலைபார்த்து வருகிறார்.
நேற்று காலை நேரத்தில் கம்பியூட்டர் ஆபரேட்டர் கமலா தேவி வழக்கம்போல வேலைக்கு வந்துள்ளார். அச்சமயம் வங்கிக்குள் கணபதி வாயில் நுரைதள்ளி மயங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின் இதுதொடர்பாக அரும்பாவூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கணபதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு விஷம் குடித்து கணபதி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கணபதியின் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.