மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடுரோட்டில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த வேன்; 19 பயணிகள் படுக்கும்.!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று ஓடுனதின் கட்டுப்பாட்டை இழந்த வேன் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
பாடாலூர் அருகேயுள்ள விஜயகோபாலபுரம் பகுதியில் இவ்விபத்து நடந்துள்ளது. வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக பாடாலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் காயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக சிறுவாச்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். விபத்து குறித்து பாடாலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்விபத்தில் வேனில் பயணம் செய்த 19 பயணிகள் காயம் அடைந்தனர்.