மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டாட்டூ குத்துவதால் ஆர்வமா?.. அந்த இடத்தில் டாட்டூ குத்தி துள்ளத்துடிக்க உயிரிழந்த 22 வயது கல்லூரி மாணவர்..!
இன்றளவில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இடையே டாட்டூ குத்தும் கலாச்சாரம் என்பது அதிகரித்து வருகிறது. டாட்டூவினால் பின்விளைவுகள் ஏற்படும் என்ற அபாயம் இருப்பினும், சிலர் அதனை அஜாக்கிரதையாக எடுத்துக்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வரும் கல்லூரி மாணவரான பரத் (வயது 22) என்பவர், கழுத்து பகுதியில் டாட்டூ குத்தியுள்ளார். இதனால் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு, இறுதியில் டாட்டூ குத்திய இடத்தில் கட்டி உருவாகியுள்ளது.
தொடர்ந்து டாட்டூ பதிவிட்ட இடத்தில் கட்டி உண்டாகி வலி ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் மருத்துவ சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரத் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த அவரின் நண்பர்கள், நண்பின் உடலுக்கு திரளாக வந்து அஞ்சலி செலுத்தி கண்ணீருடன் நின்றனர்.