கல்விக்கடன் ரத்தை நம்பி ஏமாற்றம்.. மேலாளரின் கெடுபிடியால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை.! 



perambalur-woman-suicide-education-loan

 

ஆட்சி மாறிருச்சு, கல்விக்கடன் ரத்தாகி நமக்கு விடியல் கிடைத்துவிடும் என காத்திருந்த பெண்ணுக்கு தற்போது வரை ஏமாற்றமே மிஞ்ச, வங்கிமேலாளரின் கெடுபிடி காரணமாக பெண் தற்கொலை செய்துகொண்ட சோகம் பெரம்பலூரில் நடந்துள்ளது.

 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், சிறுகுடல், கீழ்ப்புலியூர் பகுதியில் வசித்து வருபவர் சின்னத்துரை. இவரின் மனைவி செல்லம்மாள். தம்பதிகளின் மூத்த மகன் படிப்புக்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, அங்குள்ள இந்தியன் வங்கிக்கிளையில் ரூ.2.41 இலட்சம் கல்விக்கடன் பெற்றுள்ளனர். 

இதையும் படிங்க: #பெரம்பலூர் : கழிவுநீர் வாய்க்காலில் வீசிய துர்நாற்றம்.. தோண்டி பார்த்ததில் பேரதிர்ச்சி.!

ரூ.2 இலட்சம் செலுத்தி இருக்கின்றனர்

தற்போது இந்த தொகைக்கு வட்டியுடன் ரூ.4 இலட்சம் செலுத்த வேண்டும். ஆனால், தம்பதியின் மகனுக்கு சரிவர வேலை கிடைக்காமல் பணம் செலுத்தவில்லை. தமப்தி கஷ்டத்தில் இருந்தாலும், சிறுகச்சிறுக பணம் சேர்த்து ரூ.2 இலட்சம் வரை பணம் செலுத்தியுள்ளனர். 

Perambalur

கடன் தொகையை செலுத்தவில்லை

எஞ்சியுள்ள தொகையை கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போட்டதாக தெரியவருகிறது. அதாவது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படலாம் என்ற காரணத்தால், கடன் தொகையை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதனால் கடன் மேலும் அதிகரித்துள்ளது. 

மேலாளர் கெடுபிடி

சம்பவத்தன்று தனது சேமிப்பு கணக்கில் எஞ்சியுள்ள சிறிய தொகையை வீட்டு செலவுக்கு எடுக்க செல்லாமல் வங்கிக்கு சென்றார். அங்கு அவரின் கணக்கை நிர்வாகம் கல்விக்கடனை மேற்கோளிட்டு முடக்கி வைத்துள்ளது. மேலாளரிடம் செல்லாமல் காலை முதல் 4 மணிவரை கெஞ்சியும் பலனில்லை.

பெண் தற்கொலை

இதனால் மனவேதனையடைந்த செல்லாமல், தனது தோட்டத்திற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரை காணாது வங்கி உட்பட பல இடங்களில் தேடி அலைந்த குடும்பத்தினர், இறுதியாக தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது அவரின் சடலம் மீட்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அரசு மாறினால் மாற்றம் வந்துவிடும் என செயல்படாமல், எதோ ஒருவேலை பார்த்து கடனை தொடர்ந்து அடைந்திருந்தால், இந்நேரம் கடன் முடிந்திருக்கும், அல்லது முடியும் தருவாயில் இருந்திருக்கும். ஆட்சியாளர்கள் வாக்குக்காக கூறும் வார்த்தையை நம்பினால் எந்த மாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் சாட்சியாக அமைந்துள்ளது. 
 

இதையும் படிங்க: பெரம்பலூர்: 20 வயது மாணவருடன் ஓட்டம் பிடித்த 27 வயது பேராசிரியை.. கணவர், குழந்தை பரிதவிப்பு.!