ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பயிற்சியளிப்பதாக கூறி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளியின் தாளாளர்..!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் தனியாருக்கு சொந்தமான சாந்தி நிகேதன் மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தாளாளராக இருந்தவர் குருதத் (64). இந்த பள்ளியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று சிறப்பு வகுப்பு நடந்துள்ளது.
இந்த நிலையில், சிறப்பு வகுப்பில் ஐந்தாம் வகுப்பை சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றனர். இவர்களுடன் அதே வகுப்பில் படிக்கும் 10 வயது சிறுமியும் பங்கேற்றுள்ளார். அவரிடம் சென்ற பள்ளியின் தாளாளர் குருதத் தமிழில் எழுதுவதற்கு பயிற்சி கொடுப்பதாக சொல்லி தனது அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் தனது அறையின் கதவை சாத்திய குருதத், 5 ஆம் வகுப்பு படித்த சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
சிறப்பு வகுப்பு முடிந்து அழுதபடியே வீடு திரும்பிய சிறுமி, தனது பெற்றோரிடம் பள்ளியில் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், பள்ளியின் தாளாளர் குருதத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்த வழக்கு, கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தது. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட குருதத் சிறுமியை அறைக்குள் வைத்துப் பூட்டியதற்காக 2 வருட சிறைதண்டனையும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதற்காக 7 ஆண்டுகளும் மொத்தம் எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.