ஆசை வார்த்தை கூறி... தனியார் பள்ளி ஆசிரியை பலாத்காரம்.! தொழிலதிபர் மீது வழக்கு பதிவு.!



private-school-teacher-was-sexually-assaulted-by-a-buss

கோவையைச் சார்ந்த தனியார் பள்ளி ஆசிரியை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில்  தொழிலதிபருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது காவல்துறை. கோவையைச் சார்ந்த 37 வயது ஆசிரியை ஒருவர் தனியார் பள்ளியில் பணியாற்றி வந்தார்.

இவருடன் பணியாற்றிய ஆசிரியர் ஒருவரின் மூலம் வடவள்ளி பகுதியைச் சார்ந்த சந்தோஷ் குமார்(42) என்ற தொழிலதிபர் ஆசிரியை அறிமுகமானார். தொழிலிலதிபரும் ஆசிரியையும் நட்பாக பழகி வந்திருக்கின்றனர். இந்நிலையில் தொழிலதிபர் தனக்கு திருமணம் ஆகி விட்டதாகவும் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

kovaicrime

மேலும் மனைவியை திருமணம் செய்துவிட்டு ஆசிரியையை திருமணம் செய்யப் போவதாகவும் உறுதியளித்திருக்கிறார். இந்நிலையில் அவர் தனது இல்லத்திற்கு ஆசிரியையை வரவழைத்து மனைவியை விவாகரத்து செய்து விட்டேன் உன்னை நிச்சயமாக திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் தொழில் தேவைக்காக ஆசிரியை இடமிருந்து 25 லட்ச ரூபாய் படமும் பெற்றுள்ளார்.

அதன் பிறகு ஆசிரியை தன்னை திருமணம் செய்து கொள்ளக் கூடிய போது  இவர் மறுத்திருக்கிறார். மேலும் 25 லட்ச ரூபாய் பணத்தை திரும்ப கேட்டபோது கொலை செய்து விடுவதாகவும் விரட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து பேர் ஒரு காவல் நிலையத்தில்  தொழிலதிபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தார் ஆசிரியை. இந்தப் புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் சந்தோஷ் குமாரின் மீது கொலை மிரட்டல் மோசடி மற்றும் பலாத்காரம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறை  இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.