மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணம் செய்வதாக, 3 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆங்கில ஆசிரியர் கைது..!
சேலம் மாவட்டத்தில் உள்ள நடுபட்டி கிராமத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராஜமாணிக்கம்.
இந்நிலையில், பள்ளியில் பயின்று வரும் 3 மாணவிகளுக்கு ராஜமாணிக்கம் தனித்தனியே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், தான் உன்னை திருமணம் செய்வதாகவும் பேசி அத்துமீற முயற்சித்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களின் பெற்றோரிடம் விபரத்தை தெரிவிக்கவே, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ராஜமாணிக்கத்தை கைது செய்தனர்.