#JustIN: நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியது யார்? சிசிடிவி கேமரா காட்சியில் புதிய திருப்பம்.!
ஜுஸ் குடிக்கும் கேப்பில், ஸ்கூட்டரை அபேஸ் செய்த திருடர்கள்.. சிசிடிவியில் சிக்கிய தரமான சம்பவம்.!
பட்டப்பகலில் ஜூஸ் கடை முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரை, திருடிசென்ற இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதியில் பிரேம் என்பவர் ஒரு கடைக்கு ஜுஸ் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தனது ஆக்டிவா ஸ்கூட்டரை கடைக்கு முன்பாக நிறுத்தி பூட்டிவிட்டு உள்ளே சென்ற நிலையில், 15 நிமிடங்கள் கழித்து வெளியில் வந்துள்ளார்.
அவர் வெளியே வந்து பார்த்தபோது, கடையின் முன்பு நிறுத்தி வைத்திருந்த அவரது ஸ்கூட்டர் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அத்துடன் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை அவர் ஆய்வு செய்தபோது, அதில் இரண்டு மர்மநபர்கள் அவரது வண்டியை திருடி சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.
இதனால் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக காவல்துறையினரிடம் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்த நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்ட ஏற்காடு காவல் துறையினர் இருவரையும் தேடி வருகின்றனர்.