சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் வழக்கு! மேலும் சிக்கும் பல காவலர்கள்! சிபிசிஐடி போலீசார் அதிரடி!



sathankulam issue action

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டு சிறையில் உயிரிழந்தவிவகாரம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் லாக்கப் மரணம் குறித்த வழக்கு தற்போது விறுவிறுப்பு அடைந்துள்ளது. இந்த வழக்கு நேற்று முதல் சிபிசிஐடி வசம் வந்த பிறகு அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் இந்த வழக்கு விசாரணையை நேற்று சிபிசிஐடி தொடங்கியது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில், சிபிசிஐடி ஐ.ஜி, மாவட்ட காவல் ஆண்காணிப்பாளர் ஆய்வு தொடங்கியுள்ளனர். சாத்தான்குளம் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு பிறகே காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்வது பற்றி முடிவெடுக்கப்படும் என்று சிபிசிஐடி ஐ.ஜி தெரிவித்துள்ளார்.

sathankulam

இந்தநிலையில், இந்த வழக்கில் முக்கியமாக குற்றம்சாட்டப்பட்ட எஸ்.ஐ ரகுகணேஷை சி.பி.சி.ஐ.டி காவல்துறை கைது செய்தனர். இதனையடுத்து எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் என்பவரையும் கைது செய்ய சிபிசிஐடி போலீசார் முயற்சித்தனர். ஆனால் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தலைமறைவாக இருப்பதாகவும் அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளதால் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற அதிகாரிகளும் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.