எங்களை மிரட்டுறீங்களா? 40 இலட்சம் மாணவர்களின் எதிர்காலம்.. நா ததும்ப அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.!



School Education Minister Anbil Mahesh latest Speech 16 Feb 2025 

 

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "தமிழக மக்களே! ஒன்றிய அரசு நம்மை வஞ்சித்து வருகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும், முன்னரும் அதனை சொல்கிறோம். நாங்கள் ஒன்றிய அரசை குற்றம் சாட்டும்போது, நாங்கள் பொய் சொல்வதாக பாஜக மற்றும் ஒன்றிய அரசுத்தரப்பு கூறுகிறது. கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம். 

40 இலட்சம் மாணவ செல்வங்களின் முழு எதிர்காலம் இருக்கிறது. ஆசிரியர், பணியாளர்கள் என 38000 பேருக்கு மாத சம்பளம் வழங்க வேண்டும். மாதம் ரூ.76 கோடி, ஆண்டுக்கு ரூ.900 + கோடி செலவினம் இருக்கிறது. இவை தவிர்த்து பிற வசதிகள் அனைத்தும் கல்வித்துறைக்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். தனியார் பள்ளியில் 25% ஏழை மாணவ-மாணவியர்கள் பயிலும் திட்டத்திற்கு ரூ.400 கோடி ஆண்டுக்கு செலவாகிறது. 

இதையும் படிங்க: சென்னை: ஓசி சோறு கொடுக்காத ஓட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு; மூவர் கை எழும்பு முறிவு.!

anbil mahesh

மாநில அரசை அடிபணிய வைக்கும் முயற்சி

மும்மொழிக்கொள்கையை ஏற்றுகொண்டால் என்ன? என பிடிவாதத்துடன் ஒன்றிய அரசு இருக்கிறது. நமக்கு தேவையில்லாத ஒன்று மும்மொழிக்கொள்கை. அண்ணா, கலைஞர், முதல்வர் ஸ்டாலின் என பலரும், மும்மொழி கொள்கையின் பாதகத்தை உணர்ந்து அதனை எதிர்க்கின்றனர். எங்களை மிரட்டி அடிபணிய வைக்க முயற்சி நடக்கிறது. 

எங்களுக்கு வர வேண்டிய ரூ.2000+கோடி நிதியை யார் பெற்றுத்தந்தாலும், அதற்கான மரியாதை அவர்களுக்கு வழங்கப்படும். அரசியல் மாணவர்கள் விஷயத்தில் செய்ய வேண்டாம். எங்களை பொறுத்தவரையில் அது இயக்கத்திற்கான பணம் அல்ல, 40 இலட்சம் மாணவர்களுக்கான எதிர்கால செலவு. ஒன்றிய அரசின் செயல்பாடு மற்றொரு மொழிப்போரை தூண்டும் வகையில் இருக்கிறது" என பேசினார்.

இதையும் படிங்க: வெளில போடா நாயே.. திமுக பிரமுகரின் முகத்தில் காரி உமிழ்ந்த நிர்வாகி.. சாதி ரீதியாக இழிவுபடுத்தி அநீதி செயல்.!