#Breaking: சீமானுக்கு எதிரான திருமண மோசடி வழக்கு விசாரணை; உச்சநீதிமன்றம் அதிரடி தடை.!



Seeman Supreme Court Appeal Accepted by SC 

இருவருக்கும் இடையேயான பிரச்சனையை பேசி தீர்க்க வாய்ப்புள்ளதா? என ஆராய்ந்து செயல்பட நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது, திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து தன்னை பலாத்காரம் செய்து ஏமாற்றி, கருக்கலைப்பு செய்ததாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். 

கடந்த 2011 ம் ஆண்டு முதல் சீமானின் மீது நடிகை குற்றசாட்டை முன்வைத்து வந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் 3 மாதத்துக்குள் பலாத்கார வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இதையும் படிங்க: "பாலியல் குற்றவாளி சீமானை தப்பவிடாதே" - பெரியார் கழகத்தினர் ஊர் ஊராக போஸ்டர்..!

seeman

இடைக்கால தடை விதிப்பு

சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமும் அளித்து இருந்தார். மேலும், தன் மீதான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் செய்திருந்தார். இந்நிலையில், சீமான் தனது எதிரான வழக்குகளை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் சீமானுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய தடை விதித்து இருக்கிறது. 

இடைக்கலமாக விசாரணை ஏதும் மேற்கொள்ள கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இருவருக்கும் இடையேயான பிரச்சனையை பேசி தீர்க்க வாய்ப்புள்ளதா? என ஆராய்ந்து செயல்படவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. 

இதையும் படிங்க: "விஜயலட்சுமியின் கர்ப்பப்பையை நீக்க முடிவு.?" வீரலட்சுமி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.!