மக்களே.. தொடங்குகிறது அக்னி நட்சத்திரம், இனி வெயில் தாண்டவம் தான்.. உஷாராக இருங்கள்.!



Summer Season Agni Natchathira

 

இந்தியாவில் கோடைகாலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அக்னி நட்சத்திரத்தின் போது இன்னும் கூடுதலாக இருக்கும். இதனால் பல மாநிலங்களில் திடீர் கோடை மழையும் பெய்யலாம்.

தமிழ்நாடு, ஆந்திரா உட்பட இந்தியாவின் தென் மாநிலத்திலும், வட மாநிலத்திலும் சுட்டெரிக்கும் வெயிலால் இப்போதே மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், மே மாதம் 4ம் தேதி முதல் 28ம் தேதி வரையில் அக்னி நட்சத்திரம் நீடிக்க இருப்பதால், வெயிலின் தாக்கம் உச்சமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனல் காற்றும் வீசக்கூடும்.

பல மாவட்டங்களில் தமிழகத்தில் 100 டிகிரி பேரன் ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் கோடை மழை இருந்தாலும், வெயிலின் தாக்கமும் அதிகமாகும் என கூறப்பட்டுள்ளது.