மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாட்சப், பேஸ்புக் டிபி-களில் உங்க போட்டோவை வைக்காதீங்க - பெண்களுக்கு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் எச்சரிக்கை.!
சமூக வலைதளங்களின் பயன்பாடு தற்போது ஆண், பெண் என இருபாளர்களிலும் அதிகரித்து இருக்கிறது. சில சமூக விரோத எண்ணம் கொண்ட நபர்களால் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் பதிவிடப்படும் பெண்களின் புகைப்படங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி, கல்லூரி மாணவிகள் தங்களது வாட்ஸ்அப் டிபியில் புகைப்படங்களை வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
டெக்னாலஜியில் நன்மைகளைப் போல, தீமைகளும் இருக்கிறது என்பதால் புகைபடங்களை எடுத்து சமூகவிரோத கும்பல் அதனை மார்பிங் செய்ய நேரிடும் என்றும், அதனை எப்படி கையாளுகிறோம் என்பது முக்கியம் என்பதால் இவ்வாறான செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.