#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
போடி: பழங்குடியின கர்ப்பிணி பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம்.. பதறிப்போன உறவினர்கள்..!
தேனி மாவட்டத்தில் உள்ள போடி, சிரங்காடு கிராமத்தில் 45 பழங்குடியின குடும்பம் உள்ளது. இந்த ஊர் போடி நகரில் இருந்து 10 கி.மீ தொலைவில் இருந்தாலும், சாலை வசதி என்பது கிடையாது. இந்த கிராமத்தில் உள்ளவர்கள் விவசாய கூலிகளாக வேலைபார்த்து வருகிறார்கள்.
இவர்களுக்கு அரசு பல வருடத்திற்கு முன்னதாக தொகுப்பு வீடுகளை கட்டிக்கொடுத்த நிலையில், அவை சேதமடைந்த நிலையில் உள்ளது. அந்த வீட்டில் தான் அனைவரும் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பரமன் (வயது 35). இவரின் மனைவி ஈஸ்வரி.
தம்பதிகள் இருவருக்கும் 4 மகள்கள் மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில், தற்போது மீண்டும் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள ஈஸ்வரிக்கு நேற்று மாலை பிரசவ வலி ஏற்படவே, குடும்பத்தினர் வேலைக்கு சென்றுள்ளனர். மேலும், பரமனுக்கு கடந்த மாதம் விபத்து ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் இருக்கிறார். பிற குழந்தைகளும் அவருடன் உள்ளனர்.
இந்நிலையில், அக்கம் பக்கத்து வீட்டிலும் ஆட்கள் இல்லாத காரணத்தால், ஈஸ்வரி பிரசவ வலிக்காக கத்தியும் பலனில்லை. இறுதியாக குழந்தை சுகப்பிரசவத்தில் வெளியே வந்துள்ளது. பிரசவத்தை தொடர்ந்து ஈஸ்வரியும் மயக்கமாக, 11 மாதத்தில் பிறந்த 6 ஆவது குழந்தை அழுதுகொண்டு இருந்துள்ளது.
இரவு நேரத்தில் வேலையை முடித்துவிட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ஈஸ்வரியை கண்டு பதறியுள்ளனர். பின்னர், உடனடியாக அவரை மீட்டு, அவசர ஊர்தி மூலமாக போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தாய்க்கும் - சேய்க்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.