#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
16 வயது சிறுமிக்கு குழந்தைப்பேறு.. கட்டாய திருமணம் செய்த கயவன் போக்ஸோவில் கைது.!
தேனி மாவட்டத்தில் உள்ள போடி, குச்சனூர் துரைசாமிபுரம் மேலத்தெருவில் வசித்து வருபவர் தங்க பரமானந்தம் (வயது 25). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். பரமானந்தம் கடந்த வருடம் மே மாதம் 16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், தேனி அரசுமருத்துவக்கல்லூரி பிரசவத்திற்காக சிறுமி அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிறுமியின் வயது தொடர்பாக விசாரிக்கையில் மருத்துவர்களுக்கு விபரம் தெரியவரவே, காவல் துறையினருக்கு தகவல் கூறப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போடி அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை செய்தனர். விசாரணையில், சிறுமிக்கு பெற்றோர் கட்டாய திருமணம் செய்தது அம்பலமானது. இதனையடுத்து, சிறுமியின் கணவரான தங்க பரமானந்தம் மீது போக்ஸோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் கைது செய்தனர்.
சிறுமியின் பெற்றோர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.