திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அரசு பேருந்து மோதி மருந்து விற்பனை பிரதிநிதி பரிதாப பலி; 22 வயது இளைஞருக்கு நேர்ந்த சோகம்.!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள லெவிஞ்சிபுரம் பகுதியில் வசித்து வருபவர் சின்னராஜா. இவரின் மகன் அன்பு ஆனந்த் (வயது 22). இவர் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் தனியார் மருந்து நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.
மருந்து விற்பனை பிரதிநிதி
இவர் தினமும் தனது வேலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வருவது வழக்கம். அலுவலகத்தில் இருந்து பணி விஷயமாகவும் அவ்வப்போது பயணிப்பார். இந்நிலையில், நேற்று தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஆனந்த் சென்றுகொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: இரயிலுக்கு அடியில் சிக்கி சுக்குநூறாகிய இருசக்கர வாகனம்; ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய பயணிகள்.!
விபத்தில் சிக்கி சோகம்
அச்சமயம், ஆனந்த்தின் மீது தூத்துக்குடி நோக்கி பயணம் செய்த அரசு பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஆனந்த், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: #JustIN: அவசர ஊர்தியை இயக்கிய 17 வயது சிறுவன்; 2 பெண்கள் படுகாயம்.. கடலூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி.!