மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கட்டிலில் இருந்து தவறி விழுந்து, 23 நாட்களேயான பச்சிளம் குழந்தைக்கு நடந்த சோகம்: பெற்றோர்களே கவனம்.!
சிறுகுழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களும், அவர்களின் குடும்பத்தினரும் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம், சித்தாத்தாகுறிச்சி, வடக்குத்தெருவில் வசித்து வருபவர் கருவேலமுத்து. இவரின் மனைவி கருவேலங்கனி.
கர்ப்பமாக இருந்த கருவேலங்கனிக்கு, கடந்த 23 நாட்களுக்கு முன்னதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்காக பெண்மணி மீனாட்சிபட்டியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
நேற்று மாலை நேரத்தில் குழந்தை கட்டிலில் உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், திடீரென விழிப்பு வந்து உருண்டு கீழே விழுந்ததாக தெரியவருகிறது. இதனால் குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடுமத்தினர், உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு குழந்தையின் மரணம் உறுதி செய்யப்பட்டது.
இதனால் குழந்தையின் உடலை கட்டியணைத்து தாய் கதறியழுதது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது. மேலும், சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.