மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரூ.11 ஆயிரம் திருடியதாக திருநங்கை அடித்தே கொலை.. செய்யாத குற்றத்திற்காக நடந்த பயங்கரம்.!
எங்கிருந்தோ வந்த இருவர் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்த திருநங்கையை அடித்தே கொன்ற பரிதாபம் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை, சுத்தமல்லி பகுதியை சேர்ந்தவர் குமார். இவரின் மகன் பிரபு. திருநங்கை ஆவார். இவர் நேற்று பாளை - ரெட்டியார்பட்டி சாலையில் மயங்கி கிடைக்கவே, அவரை மீட்ட பொதுமக்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பெருமாள்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கினர். முதற்கட்டமாக திருநங்கை பிரபுவிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், பிரபு யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
தினம்தோறும் நாங்குநேரி சுங்கச்சாவடியில் யாசகம் பெற்று வந்துள்ளார். கடந்த 16ம் தேதியில் சுங்கசாவடியில் இருந்தபோது, லாரியில் வந்த 2 பேர் பிரபுவை அழைத்து தங்களின் லாரியில் இருந்த ரூ.11 ஆயிரம் பணத்தை நான் திருடிவிட்டேன் என்று அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
பிரபுவின் தலையில் சுத்தியில் கொண்டு அடித்து லாரியில் இருந்து வெளியே வீசி சென்றுள்ளனர் என்பது அம்பலமானது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி, லாரியில் வந்த 2 பேரை தேடி வருகின்றனர்.