மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரயில் முன்பாய்ந்து வடமாநில இளைஞர் தற்கொலை; ஜோலார்பேட்டை இரயில் நிலையத்தில் சோகம்.!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை இரயில் நிலையத்தில், நேற்று நடைமேடை எண் 4ல் தானபுரில் இருந்து பெங்களூர் நோக்கி பயணிக்கும் சங்கமித்ரா விரைவு இரயில் வந்தது.
அச்சமயம் 30 வயதுடைய வடமாநில இளைஞர் ஒருவர், திடீரென நடைமேடையில் வந்துகொண்டு இருந்த இரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
அவரின் உடலை மீட்ட இரயில்வே காவல் துறையினர், உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த இளைஞர் யார்? எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என விசாரணை நடந்து வருகிறது.