ஓட்டுனரின் வங்கியில் ரூ.9000 கோடி பணம்; ஷாக் கொடுத்த தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி..!



TMB Bank rs 9000 Crore Deposit 

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர் ராஜ்குமார், சென்னை கோடம்பாக்கம் பகுதியில் இருக்கும் நண்பரின் அறையில் தங்கியிருந்து வாடகை கார் இயக்கி வருகிறார். 

இவரின் வங்கிக்கணக்கில் கடந்த செப். 9ம் தேதி ரூ.15 பணம் மட்டுமே இருந்த நிலையில், ரூ.9000 கோடி பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. 

இது மோசடி கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் என எண்ணியவர், தனது வங்கிக்கணக்கில் இருந்து நண்பருக்கு ரூ.21 ஆயிரம் பணம் அனுப்பி சோதித்தபோது பணவரவு அம்பலமானது. 

இதற்கிடையே, சில நிமிடங்களில் ரூ.21 ஆயிரம் போக மீதமுள்ள கோடிகள் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி நிர்வாகத்தால் பிடித்தம் செய்யப்பட்டது. மீதமுள்ள ரூ.21 ஆயிரம் பணத்தையும் அதிகாரிகள் செலவழிக்க வேண்டாம் என ராஜ்குமாரை கேட்டுக்கொண்டுள்ளனர். 

இதுதொடர்பாக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அதிகாரிகள் ராஜ்குமாரை நேரில் அழைத்து பேசியபோது இருதரப்பு வாதங்கள் நடந்ததாக தெரியவருகிறது. இதனால் ராஜ்குமார் வழக்கறிஞர் உதவியுடன் பிரச்சனையை பேசி வந்த நிலையில், உயிர் அச்சத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.