மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொதுமக்களே உஷார்.. மர்ம காய்ச்சலால் பயிற்சி பெண் மருத்துவர் மரணம்.!
சமீப காலமாக பருவநிலை மாற்றங்களால் பல்வேறு வகையான நோய் தொற்றுகள் பொதுமக்களை தாக்குகின்றன. வழக்கமான சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்றுக்களுடன் டெங்கு மற்றும் நிபா வைரஸ் காய்ச்சலும் பரவி வருகின்றன.
அதன்படி சென்னையில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த சிந்து என்ற மாணவி மருத்துவ படிப்பை முடித்துவிட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சிந்துவின் ரத்த மாதிரிகளை பரிசோதித்த போது அவருக்கு டைபாய்டு காய்ச்சல் என முடிவுகள் வெளியாகி உள்ளது. இதனிடையே மீண்டும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் முடிவுகள் வருவதற்கு முன்னரே இன்று அதிகாலையில் அவர் உயிரிழந்துள்ளார். பயிற்சி மருத்துவரே மர்ம காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.